கடல் - ஒரு எண்ணோட்டம்
ஏன் பார்க்கவில்லை
சமூக வலைதளங்களிலும் , பலரின் பதிவுகளிலும் கடலை பற்றி பல விதமாக எல்லோரும் ஒரே விதமாக விமர்சித்து இருந்தார்கள். இதனால் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஒரு உந்துதல் இல்லாமலே இருந்தது.
ஏன் பார்த்தேன்
எனது அக்கா பையன் , சமூக இணையத்தில் கடல் ஒரு நல்ல படம் என்று போட்டிருந்தான், சிறிய உரையாடலுக்கு பின் சரி நாமும் பார்த்து ஒரு முடிவுக்கு வருவோம் என்று முடிவு செய்து நேற்று தான் பார்த்தேன் .
அவனிடம் செய்த உரையாடலில் ஒரு சிறு பகுதி
அவன் : இது நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையே நடக்கும் ஒரு போராட்டம்
நான் : எல்லா படத்திலும் அதே கதை தானே, கடைசியில் நல்லது வெல்லும்.
அவன்: இல்லை அது நல்லவர்களுக்கும் கேட்டவர்களுக்கும் நடக்கும் போராட்டம் , இது நல்லது கேட்டது இரெண்டுக்கும் நடக்கும் போராட்டம், சிலருக்கு தான் அது புரியும்
நான்: சரி பார்ப்போம்
கதை
நம்மவர் படத்தின் கடைசி பகுதியில் கமலுக்கும் கரணுக்கும் இடையே நடக்கும் சண்டையின் பொது மாணவர்கள் கரண் மீது கல் எறிவார்கள் , கமல் அவனை மறைத்துக்கொண்டு காப்பாற்ற, அதில் ஒருவன் சொல்லுவான்
"நகருங்க சார் , இவன் எல்லாம் திருந்தவே மாட்டான், இவனை நாங்கள் கல்லால் அடிச்சே கொள்கிறோம்"
என்று அதற்கு கமல் சொல்லுவார்,
"ஏன் திருந்தனும், ஒருத்தனுக்கு மன்னிப்பே இல்லன்னு தெரிஞ்ச அப்புறம் ஏன் திருந்தனும், எவன் திருந்துவான் "
என்று, நான் எழுதினந்து கொஞ்சம் முன்ன பின்ன தப்பா இருந்தாலும் அந்த வசனம் இப்படியாக தான் போகும்.
சரி அதுக்கும் கடல் படத்துக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்டால் அது தான் மன்னிப்பு.
மன்னிப்பு கிடைக்காத அர்ஜுன் என்னவாகிறார் , மன்னிப்பு கிடைத்த கௌதம் கார்த்திக் என்னவாகிறார் என்பது தான் கதை. இந்த ஒரு வரி படத்தின் கடைசியில் வரும் படகு காட்சியில் தான் புரியும்.
இது தான் படத்தின் அழகான, அழுத்தமான, ஆழமான காட்சி. அதுக்கு ஒரு WOW...
அப்பிடின்னா மீதி படம் என்றெல்லாம் கேட்க கூடாது. படம் கடைசிவரை பொறுமை வேண்டும்.
இந்த படம் பார்த்து முடித்தவுடன் எனக்கு ஏனோ ராவணன் படம் ஞாபகத்தில் வந்தது
அந்த படத்திற்கும் ராமாயணத்தின் தழுவல் என்றெல்லாம் விமர்சனங்கள் இருந்தன,
படம் பார்த்தபின் கடைசியில் ஐஸ் யை மீண்டும் வந்து விக்ரமை சந்திக்கும் காட்சி, அங்கே ஒரு WOW... .
அங்கே தான் மணிரத்தினம் நிற்கிறார் என்று தோன்றுகிறது.
மற்றபடி படத்தில் சொல்லவேண்டும் என்றால், கிறிஸ்துவர்கள் என்றால் தமிழ் சினிமா ஆண்டாண்டு காலமாக ஒரு வடிவம் வைத்திருகிறது, அது இதிலும் தெரிகிறது.
மகுடி பாடல் இரண்டு மூன்று இடங்களில் வருகிறது அதில் முதலில் வரும் பொது மட்டும் காட்சியோடு ஒட்டவில்லை, நீ பாம்பு , நான் மகுடி டா ...
மற்றபடி துளசி, கௌதம் இருவரையும் வரவேற்போம். அழகாக இருக்கிறார்கள், நன்றாக வளர வாழ்த்துக்கள் .
படம் எப்பிடின்னு நீங்களே பார்த்து முடிவுக்கு வாங்க. என் அக்கா பையனுக்கு வேறு விதமாக பிடித்திருந்தது, எனக்கு வேறு விதமாக பிடித்திருந்தது, உங்களுக்கு ... கமெண்ட்ல போடுங்க

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக