சிந்தனைகள் இரண்டு
ஒன்று:
பாரிஸ் நகரத்தை பற்றியும் அதன் மெட்ரோவை பற்றியும் ரசித்து ரசித்து, ஒரு ஐம்பது பக்கத்துக்கு மேல் எந்த ஒரு சின்ன விஷயத்தையும் விட்டுவிடாமல் தெரு பேர், மெட்ரோ பேர், மெட்ரோ எண், ரேச்தொரன்ட், நூலகம், கடைகள், டாயிலெட், பெண்கள், உடை, பீர், வீடுகள், கருப்பர்கள், மற்ற இத்யாந்தி இத்யாந்தி விஷயங்கள் என நம் கண்ணாயிரம் பெருமாள் எழுதிருந்த நாவலை மெட்ரோவில் ஆழ்ந்து படித்துக்கொண்டிருந்தேன். பதிமூன்று ஆண்டுகள் இந்த தெருக்களிலும், மெட்ரோக்களிலும் சென்றிருக்கிறேன், அந்த நாவலில் விவரித்திருந்த அனைத்தையும் பார்த்து இருக்கிறேன் ஆனால் அந்த நாவலை படிக்கும் பொது மட்டுமே உணர்ந்தேன், அனுபவித்தேன், ரசித்தேன். புத்தகத்திலிருந்து முகம் நிமிர்த்தி சுற்றி பார்த்தேன், நாவலில் எழுதியிருந்த அனைத்தையும் மீண்டும் அதே ஆழத்துடன் பார்த்தேன், ரசித்தேன்.
பி.கு: சாரு நிவேதிதா எழுதிய "ராஸ லீலா" தான் அந்த நாவல், இதுவரை படித்ததில் இந்த கண்ணாயிரம் பெருமாள் தான் சாருவாக இருக்குமோ என்று ஒரு சந்தேகம்.
இரண்டு:
பிறந்த நாளன்று காலை ஆபீஸ் சென்றவுடன் மதியம் உணவுக்கு ஒரு நல்ல ரேஸ்டோரென்டுக்கு போகலாமா என்று எனது டீமுக்கு மின்னஞ்சலில் அழைப்பு விட்டேன், உடனே பதில் அனைவரிடமும் இருந்து போகலாம் என்று. வழக்கமாக அழைப்பு விடுத்தால் மூன்று பேர் வருவார்கள், மீதி பேர் ஆளுக்கொரு அதாவது ஒரு காரணம் சொல்லிக்கொண்டு வரமாட்டார்கள். என்னுடைய பிறந்தநாள் இவர்களுக்கு தெரிந்திருக்குமோ என்று சந்தேகம். எனது இந்த சந்தேகத்திற்கு காரணம், இங்கு பெரும்பாலான அலுவலகத்தில் அடுத்தவருடைய பிறந்த நாள் நமக்கு தெரியாது, அவர்களும் சொல்ல மாட்டார்கள். எனது மேனேஜருக்கும் மட்டும் தெரியும், ஒருவேளை அவன் தான் சொல்லிருக்க வேண்டும். என்னது மேனேஜரை அவன் என்று சொல்லவதா என்று யோசிப்பர்வகளுக்கு, இங்கு நன்கு பழகியவுடன் ஒருமையில் தான் அழைப்போம். சார் சார் என்றெல்லாம் கூன கும்பிடு எல்லாம் போடா வேண்டியதில்லை. ஒரு வேளை இந்தியாவில் இப்போது அந்த சமரசம் வந்திருக்கலாம் ??? சரி இப்போது சாப்பாடு விஷயத்திற்கு வருவோம். மணி பண்ணிரண்டு ஆனவுடன் எல்லோரும் எழுந்தனர். வெளியில் இந்த மே மாததிலும் மழை குளிர், ஓவர் கோட்டெல்லாம் எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பினோம். கொஞ்சம் தூரம் நடந்தோம், வழக்கமாக போகும் ஒரு ரேஸ்டோரென்ட் போக போகிறார்கள் என்று எண்ணினேன் அனால் ஒரு இந்திய ரேஸ்டோரென்ட் வாசலில் எல்லோரும் நின்று என்னை பார்த்தார்கள், நானும் சரி என்றதும் எல்லோரும் உள்ளே சென்றோம். உள்ளே ஒரு அழகான, ஒரு பிரெஞ்சு இளம் பெண் எங்களை வரவேற்றாள். எத்தனை பேர் என்று கேட்டுவிட்டு எட்டு பேர் உட்காரக்கூடிய மேசையை காட்டினாள். பிறகு வந்து மெனு காட் கொடுத்தாள். எல்லோரும் முதலில் பீர் ஆர்டர் செய்தோம். பின் ஒரு வட இந்தியர் வந்து ஆர்டர் வாங்கினார் மூன்று பேர் பிரியாணி (1 இறால் பிரியாணி எனக்கு , கூடவே இறால் வறுவல் அதுவும் எனக்கு தான், 1 தாஜ் மஹால் பிரியாணி , அது என்னவோ ஸ்பெஷல் பிரியாணி என்று நினைக்க வேண்டாம் ஆடு, கோழி, இறால் எல்லாம் கலந்து அதற்கு தாஜ் மகால்ன்னு பேர் வச்சிட்டாங்க, 1 கோழி பிரியாணி), 1 ரோஹஅன்றோஷ், 2 சிக்கன் டிக்கா மாசாலா, 1 மட்டன் குருமா , 1 சிக்கன் குருமா, 4 cheese நான், 2 கார்லிக் நான், 2 plain நான் .