காதலன் பட பாடல்கள் வெளியான சமயம், 1994 என்று நினைக்கிறன், அதில் ஊர்வசி ஊர்வசி என்று ஒரு பாடலில் வைரமுத்து ஒரு இடத்தில் இப்படி எழுதியிருப்பார்
பேசடி ரதியே ரதியே
தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்
நீயடி கதியே கதியே
இரண்டு சொல்லடி குறைந்த பட்சம்
அன்றிலிருந்து எனக்குள் ஒரு கேள்வி, தமிழில் வார்த்தைகள் எத்தனை என்று. அன்று என்னால் எண்ண முடியவில்லை, இன்று, ஏன் எண்ணி தான் பார்ப்போமே என்று தோன்றியது. அதற்க்கு காரணம் அதிகமானவர்கள் சமூக வலைதளங்களிலும், பதிவீடுகளிலும் தமிழில் எழுத, அதை சுலபமாக எண்ணலாம் என்ற எண்ணமே. எனவே ஒரு சிறு வலைத்தளம் ஆரம்பித்து, ஒரு சிறிய பக்கம் ஒன்றை செய்தேன். அதில் முதன் முதலில் கேபிள் சங்கரின் பதிவை ஏற்ற ஆரம்பித்தேன், பிறகு ஜாக்கி சேகரின் பதிவை கூட சேர்த்தேன், பின்னர் ஔவையார், பாரதி பாடல்கள் சேர்க்க எண்ணி கூகுளை தேடிய பொது மதுரை ப்ராஜெக்ட் எனும் வலைத்தளம் கிடைத்தது அதில் கிட்ட தட்ட 467 தமிழ் இலக்கியம் மற்றும் நாவல்கள் இருந்தன அதில் திரு விவிலியம் முதல், திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், ஆதிசுவடி, சீராபுரானம், பொன்னியின் செல்வன் நாவல்கள், கல்கியின் நாவல்கள், பாரதியார் மற்றும் பாரதிதாசன் நூல்கள் என அனைத்தும் இருந்தன. இதை அனைத்தையும் சேர்த்தாலே தமிழின் அணைத்து வார்த்தைகளும் வந்துவிடுமென, ஒவ்வொன்றாக சேர்க்க ஆரம்பித்தேன்.
எப்படி என்றால் , ஒரு பக்கத்தில் ஒரு பகுதியை காப்பி செய்து எனது பக்கத்தில் போடுவேன் அது ஒவ்வொரு வார்த்தையாக பிரித்து, புதுவார்த்தையாக இருந்தால் சேர்த்து கொள்ளவும், ஏற்கனவே சேர்த்த வார்த்தையாக இருந்தால் அதன் பயன்பாட்டு எண்ணிக்கையை கூட்டவும் செய்யும். இப்படியாக ஒரு ஒரு லட்சம் வார்த்தைகள் சேர்த்தேன். இதை பார்த்து எனக்கு flora உதவினார்கள், பின் அவர்களே எல்லா புத்தகங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இப்போது மொத்தம் 492915 புது வார்த்தைகள் சேகரிக்க பட்டுள்ளது , இதை சேகரிக்க 3146649 வார்த்தைகள் உட்கொள்ள பட்டது. இது இன்னும் வளரும் என்னை பொறுத்தவரை எப்படியும் ஒரு பத்து லட்சத்தை தாண்ட முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் இதில் தங்க்லீஷ் வார்த்தைகளும் அதிகம், பிழையுள்ள வார்த்தைகளும் அதிகம். இது ஒரு அறுவடை போல் சேர்கிறேன், பிறகு, கதிரருப்பது போல் நட்சொற்க்களை பிரிப்பது உங்கள் உதவியுடனே.
சரி இதை சேர்த்து என்ன செய்வது என்று கேட்டால், முதலில் சேர்ப்போம். தற்பொழுது இரண்டு திட்டங்கள் உண்டு, உங்களிடமும் ஏதேனும் திட்டம் இருக்கலாம், அதை செய்வோம் .
(http://paapplis.com/tamil/status-all.php)
இந்த பக்கத்தில் ஒவ்வொரு வார்த்தையின் கீழுள்ள எண், அது எத்தனை முறை பயன்படுத்த பட்டுள்ளது என்பதாகும். ஒவ்வொரு எழுத்துக்கும் அதிகமாய் பயன்படுத்தப்பட்ட முதல் ஐந்து வார்த்தைகளே அவை. இது இன்னும் அழகுறும், பயனுறும் என்ற நம்பிக்கையில்...



