தேவையானவை :
அரிசி மாவு - 2 கப்
தண்ணீர் - 2 1/2 கப்
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 1 கப்
சர்கரை - தேவையான அளவு
செய்முறை :
அரிசி மாவுடன் உப்பை சேர்த்து ஒரு பத்திரத்தில் களக்கவும். இன்னொரு பத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, எண்ணையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும், முதல் குமிழ் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, மாவில் ஊற்றி நன்றாக கலக்கவும், வெறும் கைகளால் முடியாது, சுடும். பிறகு அச்சில் இட்டு இட்லி தட்டில் எண்ணெய் தடவி பிழிந்து விடவும். இட்லி குக்கரில் வைத்து பத்து நிமிடம் கழித்து இறக்கவும்.
தேங்காய் துருவளில் சர்க்கரை சேர்த்து வைத்து கொள்ளவும். இடியாப்பத்தின் மேல் தூவி பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக