காதலை பற்றிய ஒரு நீண்ட உரையாடலுக்கு பின் தனிமையில் எதோ சிந்தித்து கொண்டிருந்தேன். அப்படியே பின்னோக்கி சென்று யார் யாரையெல்லாம் நான் காதலித்தேனென்று (ஒருதலையாக தான் ) எண்ணிக்கொண்டிருந்தேன் . அப்போது சுத்தியால் பின்மண்டையில் அடித்தது போல் ஒரு கேள்வி "அதெல்லாம் சரி உன்னை யாரவது காதலித்தார்களா என்று" நானும் இந்த கேள்விக்கு விடை என்னுடய கடந்த காலத்தில் இருக்கிறதா என்று தேடி கொண்டிருக்கும் போதே "ஒன்னு கூட கிடையாது என்று பதில்". ஆமாம் ஒன்று கூட இல்லை என்று நினைக்கும் போதே "இருக்கு" என்று இன்னொரு குரல், இருக்கா, அது எப்படி எனக்கு தெரியாமல் போனது, என்னிடம் யாருமே சொல்லவேயில்லையே. நீ அப்போது வேறொரு உலகத்தில் இருந்தாய், உன் காதில் விழுந்தது கூட உன் மூளைக்கோ, மனதிற்க்கோ செல்லவில்லை.
யாரது என் மனைவியா, அதான் தெரியுமே அவளில்லை, அப்போ யார்? என்னுடன் டியூஷன் படித்த பெண்ணா(நான் படிச்சது ஆண்கள் பள்ளி), அக்கம்பக்கத்து வீட்டு பெண்ணா, கோவிலுக்கு வருகிற பெண்ணா, உறவுக்கார பெண்ணா, கல்லூரியில் என்னுடன் படித்தவளா யாரது ? நீ வேலை செய்த இடத்தை விட்டு விட்டாயே. அங்கே யார் என்ற யோசனையில் மூழ்கிபோனேன்.
ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலை செய்து கொண்டிருந்த நேரம், அதிக கூட்டம் இல்லாத நேரம் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று வகுப்புகள் தான் இருந்தன. ஒரு நாள் காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது , கான்வென்டில் தங்கி படிக்கும் இரண்டு பெண்கள் வருவார்கள் என்று சொன்னார்கள். அவர்கள் படிக்க வந்தார்களா, வேலை செய்ய வந்தார்களா என்று ஞாபகம் இல்லை. வழக்கமாய் இருக்கும் எதிர்பார்ப்போ, இரண்டு பெண்களை சந்திக்க போகும் ஆவலோ, எந்த ஒரு காதல் சுரப்பியும் என்னை ஏதும் செய்யவில்லை.
பத்து மணிப்போல் இரண்டு பெண்கள் ஒரு சைக்கிளில் வந்தனர், இருவரும் சராசரி கிராமத்தின் ஏழை பெண்கள் என்பது பார்த்ததும் தெரிந்தது, ஒல்லியான தேகம், எண்ணெய் வைத்த தலை, மலிவான சுடிதார், சார் என்று அழைக்கும் குரல். ஒருத்தி கொஞ்சம் உயரம், கொஞ்சம் கருப்பு இன்னொருத்தி கொஞ்சம் குள்ளம் கொஞ்சம் மாநிறம். இருவரும் வந்து அறிமுக படுத்திகொண்டார்கள். இரெண்டொரு நாட்கள் இப்படியே சென்றது, தினமும் இரண்டு வகுப்புகளுக்கிடையே நங்கள் பேசி கொண்டிருப்போம், அதில் ஒருத்தி கேள்வி மேல் கேள்வி கேட்பாள், சார் உங்களுக்கு பிடிச்ச நடிகர் யார், நடிகை யார், என்ன கலர் பிடிக்கும் , என்ன புத்தகம் படிப்பீர்கள் இப்பிடியாக சார் சார் சார்ன்னு பேசிகொண்டே இருப்பாள், இன்னொருத்தி ஏதும் பேசமாட்டாள். ஒரு நாள் மதிய உணவிற்கு பிறகு பேசிகொண்டிருந்தோம் திடீரென்று அவள் சார் ஒரு விளையாட்டு விளையாடலாமா என்றாள், என்ன விளையாட்டு என்றேன் ரெண்டு பெரும் கண் சிமிட்டாமல் பார்த்துகொண்டே இருக்க வேண்டும் யார் முதலில் கண்சிமிட்டுகிறார்களோ அவரே தோற்றவர் என்றாள், சரி என்று பார்க்க ஆரம்பித்தோம், பார்த்துக்கொண்டிருந்தோம், கருத்தமுகம் , வெள்ளைக்கண்கள், கருவிழி, பாப்பா என்று பயணித்து கொண்டிருந்தேன், இதில் யார் தோற்றோம் என்று தெரியவில்லை, அதற்குள் மதிய வகுப்பு ஆரம்பிக்க நேரம் ஆனதால் விளையாட்டை நிறுத்திவிட்டு சென்றுவிட்டேன். மாலை வகுப்பு முடிந்தவுடன் ஒரு தொலைபேசி அழைப்பு.
எனக்கு நிச்சயதார்த்த தேதி முடிவு செய்யபட்டது என்று சொன்னார்கள், நானும் அந்த செய்தியை எல்லோருக்கும் சொல்லிவிட்டு வீட்டுக்கு சென்றேன், அடுத்த நாள் வேலைக்கு வந்தேன், அன்று ஒருத்தி மட்டும் தனியாக வந்தாள், எங்கே இன்னொருத்தி என்றேன் அவளுக்கு உடம்பு சரில்லை என்றாள், அடுத்தநாளும் அவள் வரவில்லை ஏன் என்று கேட்டேன் இனிமே அவ வரமாட்டா என்றாள் ஏன் என்று மீண்டு கேட்டதும் சொன்னாள்,
உங்களுக்கு கல்யாணம்ன்னு சொன்னீங்கல்ல அதான்,
அதுக்கு?
அவ ... உங்கள ...
என்ன லவ் பண்றாளா ?
நீங்க ஏன் முன்னாடியே சொல்லல,
எனக்கு கல்யாணம்ன்னு தலையில எழுதியா ஓட்டிக்க முடியும்,
அவளால அதை தாங்கிக்க முடியல, ரொம்போ அழுதா
இந்த சம்பவம் என் சிந்தனையில் நில்லாமேல் போனதிற்கு, நான் காதலிக்கவும், என்னை காதலிக்கவும் ஒருத்தி வந்துவிட்டாள் என்ற சந்தோசமே. இதுவே அந்த பெண்ணை சந்தித்த போதும், பேசிக்கொண்டிருந்தபோதும், விளையாடியபோதும் எனக்குள் எந்த ஒரு சலனமும் சந்தேகமும் வராமல் இருந்ததன் காரணம்.
என்னிடம் சொல்லபடாத, நான் சுவைக்காத, நான் தவறவிட்ட ஒரே காதல் அதன் ஆயுள் ஒரே நாள் .
இப்போ சொல் என்னை யாரவது காதலித்தார்களா ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக