செவ்வாய், 22 மே, 2012

நீ நான்: நீயில்லையென்றால்

நீ என்றும் என் நினைவில்
          நிலவின் கறைப்போல
நீயில்லையென்றால்
         வேறுமையாவேன்

நீ என்றும் என் நினைவில்
          கடலின் நீர்போல
நீயில்லையென்றால்
          பாலைவனமாவேன்

நீ என்றும் என் நினைவில்
          நிழல் தரும் மரம்போல
நீயில்லையென்றால்
          வாடிபோவேன்

நீ என்றும் என் நினைவில்
          நிஜமான நிகழ்வுபோல்
நீயில்லையென்றால்
         வெறும் கனவாவேன்

நீ என்றும் என் நினைவில்
         வங்கியின் நிதிபோல
நீயில்லையென்றால்
         முடங்கிபோவேன்

நீ என்றும் நீங்காதடி
 நீயில்லையென்றால்
என் இதயம் தாங்காதடி
 

சனி, 19 மே, 2012

இன்று - காட்சி I

ஆள் நடமாட்டமே இல்லாத சென்னை ஸ்டேர்லிங் ரோடு, அதிசயமாக அன்று தெருவிளக்குகள் மஞ்சள் தூவி கொண்டிருந்தன, தெரு முனையில் ஒரு வங்கியின் விளம்பர பலகை தெரு மஞ்சள் நீக்கி பவுடர் போட்டது போல் வெள்ளை வெளிச்சம் பூசி இருந்தது. உள்ளே பாதி தூக்கத்தில் பாதுகாவலர் வளம் முடித்து அறிக்கை ஏட்டில் கையெழுத்திட்டு மணி பார்த்தார் மணி 3 ௦௦. அதே சென்னையில் அந்த நேரத்திலயும் பரபரப்பாய் தாம்பரம் ரயில்வே நிலையம், அதன் அருகே ஒரு குடியிருப்பில் , அருண் ரயில்வே துறை அதிகாரி என்ற பெயர் பலகையும், சங்கீதா வங்கி மேலாளர் என்ற பலகையும் வீட்டின் வாசலை அலங்கரிக்க அமைதியாய் ஒரு வீடு, உள்ளே நுழைந்ததும் விசாலமான, உயரமான சாலறை, சுவரில் அங்காங்கே அருண் சங்கீதா தம்பதியர் புகைப்படம் தொங்கி கொண்டிருந்தது, இது தவிர அழகான குழந்தைகள் படமும் நிரம்பி இருந்தது. அருண் கீழே ஒரு அறையில் உறங்கிகொண்டிருந்தார். மாடியில் ஒரு பெரிய அறையில் தொலைக்காட்சி பெட்டி அனைக்கபடாமல், ஜென்னல் பாதி துறந்திருக்க, பெரிய கட்டில் காலியாய்  இருக்க  தலையனை துணையுடன் தரையில் சங்கீதா உறங்கிகொண்டிருந்தார் மணி 3 .30 . சென்னையின் இன்னொரு மூலையில் தி நகரில் ஒரு மாடி வீட்டு மொட்டை மாடியில் ஒரு சிமெண்ட் ஓடு போட்ட ஒரு சிறிய வாடகை வீடு, உள்ளே  சத்தம் அதிகமாகவும், காற்று இதமாகவும் தந்து கொண்டிருந்த மின்விசிறி,  ஒற்றை கட்டிலில் ஒருவன் விடுதலை காற்றை சுவாசித்துகொண்டிருந்தான், எதிரே உள்ள மிக பெரிய விளம்பர பலகையில் காட்டியது மணி 4 ௦௦. பேப்பர் போடுபவர்களும், பால் போடுபவர்களும்,டியூஷன் செல்லும் மாணவர்களும் தெருவை மெதுவாய் ஆக்ரமிக்க தொடங்கிக்கொண்டிருக்க  நுங்கம்பாக்கத்தின் ஒரு தெருவில்  லக்ஷ்மி இல்லம் என்ற பெயர் தாங்கிய ஒரு அழகிய வீடு, புதிதாய் கட்ட பட்ட வீடு என்பது பார்த்ததும் தெரிகிறது, உள்ளே நுழைந்ததும் ஒரு அழகிய பெண்ணின் போட்டோ நம்  பார்வையை கவரும், வாடாத மாலையும் அணையாத விளக்கும் அவள் இறந்து சில நாட்கள்தான் ஆகியுள்ளது    என்று தெரிகிறது, மாடியில் ஒரு பொம்மையை கட்டிபிடித்தபடி உறங்கிகொண்டிருந்தாள் ஒரு சிறய அழகு தேவதை, இன்னொரு அறையில் இரண்டு நாள் தாடியுடன், சோகம் முகத்தில் தெளிவாய் தெரிய உறக்கம் வராமல் பிறண்டு கொண்டிருந்தான்  அந்த அழகு தேவதையின் தந்தை, அவனுடைய  அறையுலும் அதே  போட்டோ, கூடவே குடும்ப படங்களும் , குட்டியின் படங்களும் நிரம்பி இருந்தன அதன் நடுவே ஒரு அழகிய கடிகாரம் மணி 4 30 .   பறவைகளும், மாணவ சிட்டுகளும் சுறுப்பாக வேலை துடங்கிவிட்ட  நிலையில், டி கடையில் பேப்பர் , டி வியாபாரம் சூடு பிடிக்க, இட்லி கடை திறந்துகொண்டிருக்க, கோடம்பாக்கத்தில் தற்போதைய மிகவும் புகழ் பெற்ற நடிகையின் வீடு அவர்தான் இன்றைய சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் முக்கிய புள்ளியாக இருப்பவர் அவருடைய கணவரும் ஒரு நடிகரே. நடிகையின் வீடு எப்படி இருக்கும் என்று நீங்கள் எப்பிடி எல்லாம் நினைப்பீர்களோ  அதைவிட அழகாய் ஒரு வீடு, உள்ளே தம்பதியர் வாங்கிய அணைத்து பதக்கங்களும் தனியறையில் அணிவகுக்க, உலக ஒருமைபாட்டுக்கு சின்னமாக, புதுவை ஆரோவிலில் அணைத்து நாட்டு மண் கொண்ட ஒரு சின்னம் உண்டு, அது போல் அணைத்து நாட்டு நினைவுப்போருட்களும் வீட்டை அழகுபடுத்த, அவர்களின் வெற்றி பாதையை பிரதிபலித்தது. மாடியில் தம்பதியர் உறங்க  அவர்கள் நேர் எதிரே விலை உயர்ந்த வெளிநாட்டு கெடிகாரம் மணி 5 00 . சூரியன் உதித்துவிட்டான் கடலோரத்தில் நடை பழகுவோரும், எடை குறைப்போரும், மீன் பிடிப்போரும் என மெரினா விழித்துகொண்டிருந்தது , அண்ணா நகர் காவலர்கள் குடியிருப்பு  மைதானத்தில் காவலர்கள் தங்கள் காலை பயிற்சியை செய்து கொண்டிருந்தனர், மைதானத்தை தள்ளி உயர் அதிகரர்களின் குடியருப்பு அதில் முதல் வீடு , சூரியன் உள்ளே எட்டிபார்க்க தரையில்  மாத்தலா போட்டு ஒரு புதுமன தம்பதியர் அணைத்துக்கொண்டு படுத்திருக்க, சத்தியன் IPS என்ற பட்டம் கர்வத்துடன் நிமிர்ந்துநிற்கும் சத்யனின் படத்தின் கீழ் இருக்க, குருவி கத்துவதுபோல் காலை அலாரம் அடித்தது மணி 5 30 மனைவியை அணைத்தபடி அலாரத்தை நிறுத்தினான் சத்யன் அதே நேரம், தம்பரதிலும்,டி நகரிலும் , நுங்கபக்கதிலும், கோடம்பாக்கத்திலும் அலாரம் அணைக்க பட்டது. இன்று நடக்க போகும் நிகழ்வுகள் ஏதும் அறியாமல் அனைவரும் துழில் கலைந்தனர்.  

வெள்ளி, 18 மே, 2012

Love simply is.


Love simply is.
A feeling on your parents,
A feeling on your siblings,
A feeling on your children,
A feeling on your partner,
A feeling on your friend,
A feeling on anything,
Which is different from
a feeling on someone.
If you feel that difference
then that is LOVE.

(S)He will be front of you,
You'll not notice,
    as (s)he is transparent.
You’ll know everything,
    as (s)he is nude.
You’ll talk less,
    (s)he understands a lot.

   
Living for someone,
Someone living for you,
is love,
Only when both know that.

வியாழன், 17 மே, 2012

நீ நான்:உரசல்

நெரிசலில் உரசி நின்றோம் 
கண் பார்க்க முடியாமல் 
காதுகள் பார்த்து நின்றோம் 

இதயம் துடித்ததை இருவரும் உணர்ந்தோம் 
தடுமாறி இதயங்கள் இடம்மாறின 
தோள்களோடு நம் மூச்சுகாற்று உரையாடின 

நெரிசல் கலைந்த பின்னும் 
உரசி நின்றோம் மனதுக்குள்ளே 
சிலிர்த்துக்கொண்டோம் கண்கள் பார்த்து
சிரித்துக்கொண்டோம்

உரசிய காயம் மட்டும் நெஞ்சுக்குள்ளே !

நீ நான்:போதும்

உன் நினைவொன்று போதும் 
நிமிடங்கள் நான் கரைப்பேன் 
உன் பெயரொன்று போதும் 
கவிதைகள் நான் படைப்பேன்
உன் பார்வை ஒன்று போதும் 
இப்பாருலகம் நான் அடைவேன் 
என்னருகே நீ இருந்தால்
கறைவேன் நானே உன்னருகே

நீ நான்:சொல்ல தெரியவில்லை

ஏதெதோ செய்கிறது 
சொல்ல தெரியவில்லை 
ஏதெதோ பேசிக்கொண்டேன் 
எனக்குள்ளே 
ஆயிரம் கவிதைகள் 
உனக்குள்ளே 
சொல்லாத காதல்
எனக்குள்ளே 
சுகங்கள் எல்லாம்
உனக்குள்ளே 
சோகங்கள் எல்லாம்
எனக்குள்ளே
சோகங்கள் எனக்கு
சுகங்களே
சொல்ல தெரியிவில்லை
என் காதலே

நீ நான்:வரங்கள்

சேர்ந்திடவே உனையே
செரா வார்த்தைகள் சேர்த்திட்டேன்
பார்த்திடவே உனையே
வாரா கனவுகள் தேடினேன்
முகர்ந்திடவே உனையே
வாடா மலர்கள் நாடினேன்
வந்திடவே நீ என் முன்னே
வரங்கள் வேண்டினேன்

புதன், 16 மே, 2012

நீ நான்:முதல் பார்வை

ஞாயிறு இல்லாத ஞாயிறு மாலை
கடிகார முள்ளிரெண்டும் இணையும் வேலை
தென்றல் அசைவில் ஆலய விளாகம்
பழைய நினைவுகளில் அலையுது உள்ளம்
உதிக்கும் சந்திரன் நிறமோ, பொன்னோ இல்லை பெண்ணோ 
சிவப்பு சுடியனிந்து தென்றலாய் கடந்தவளை
பார்த்ததும் அன்றுதான், எனை தொலைத்ததும் அன்றுதான்
அவள் ஊரோ பேரோ அறியிலேன், வழியோ வயதோ அறியிலேன்
அவள் உரு மட்டும் தெரிந்தேன், என் உயிர் கூட மறந்தேன் 

முதல் சந்திப்பு

ஞாயிறு மாலை 5.30 மணி அனைவரும் கோவிலுக்கு கிளம்பி கொண்டிருந்தோம், எனக்கு மட்டும் ஒரு படபடப்பு, கோவிலுக்கு தாமதமானது காரணமில்லை, முதன் முதலாய் பெண் பார்க்க போகிறேன். எப்பிடி இருப்பாள், என்னை பிடிக்குமா போன்ற கேள்விகள் என் மனதுக்குள், நம்மை அழகாய் காட்ட எந்த உடை போடலாம் என்ற குழப்பம் வேறு. தேர்வறையில் கேள்வித்தாள் பார்க்கும் முன் வருமே, பிரசவத்தின் கடைசி நிமிடங்களில் நம் பிள்ளையை பார்க்கும் முன் வருமே அது போன்ற ஒரு உணர்வு . எனக்கு பிடித்த நீல நிற முழுக்கை சட்டை, கருப்பு ஜீன்ஸ் உடுத்திக்கொண்டு கோவிலுக்கு சென்றேன், அன்று கோவில் விளாகத்தில் தான் பூசை நடந்தது, உள்ள நுழைந்ததும் எனது கண்கள் அங்கிருந்த அனைவரையும் வரிசைப்படுத்தி, ஆண், பெண், வயது என வகை படுத்தி அலசி அராய்ந்து கொண்டிருந்தது. ஒரு காலி இடத்தில் பொய் அமர்ந்தேன். எனக்கு முன்னே ஒரு ஏழடி தூரத்தில் கருப்பு புள்ளி போட்ட வெள்ளை  சுடிதாரில் ஒரு பெண் இவளாய் இருப்பாளோ மனதிற்குள் ஒரு கேள்வி, முகம் தெரியவில்லை ஆனாலும் அழகாய் தெரிந்தாள்.  சமாதானம் சொல்ல திரும்பிய போது நெற்றிக்கு மேல் சுருள் முடி சின்ன கிரீடம் போல் இருந்தது. இவளாய் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன், நாம் நினைப்பதெல்லாம் எங்கே நடக்க போகிறது, வேறு யாரோ வரபோகிறார்கள் நாம் ஏமாற போகிறோம் என்றும் நினைத்தேன்.

பூசை முடிந்தது, கூட்டமாய் நின்றிருந்த ஒரு ஒரு குடும்பத்தை நோக்கி என் அக்கா சென்றார்கள், பின் என்னையும் அழைத்து அறிமுக படுத்தினார்கள், எனக்கு முன் அமர்ந்து  இருந்த அதே பெண், அழகாய் இருந்தாள்.  நேற்று அழகு நிலையத்தில் நான் Bleaching, Facial  செய்தும் அந்த இருட்டில் அவர்களுக்கு நிறமாய் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. ஒல்லியான, கருப்பு உருவம், பார்த்த உடனே பிடிக்கும் போலில்லை இரண்டு நாளில் கூறுவதாய் பிறிந்தார்கள்.

காத்து இருந்தேன், கற்பனைகளில், கனவுகளில், கேள்விகளில்,  ஒரு நாள், இரு நாள் .....


திங்கள், 14 மே, 2012

ஆயுட்சிறை


வழி தவறிய விந்து நான்
என்னோடு ஓடியவர்களில் 
நான் மட்டும் வழித்தவறி 
தாயின் கருவில் ஆயுட்சிறை 
இனி மரிக்கும் வரை 
இல்லை விடுதலை.

புதன், 2 மே, 2012

உபுண்டு (Ubuntu)



ஒரு மானிடவியலாளர்(anthropologist) ஆப்ரிக்க பழங்குடி சிறுவர்களுக்கு ஒரு விளையாட்டு வைத்தார் ஒரு கூடை நிறையே பழங்கள் வைத்துவிட்டு யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு இந்த பழக்கூடை என்று அறிவித்தார் சிறுவர்கள் அனைவரும் போட்டிக்கு தயாராக நின்றனர், ஒன்று, இரண்டு மூன்று என்று சொன்னவுடன் அனைவரும் கைகளை கோர்த்துக்கொண்டு ஓடி முடித்தனர், வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பழ கூடையை எடுத்து பகிர்ந்துகொண்டனர். மானிடவியலாளர் ஆச்சரியத்துடன் அவர்களை பார்த்து கேட்டார் நீங்கள் தனி தனியே ஓடிருந்தால், ஒருவன் மட்டும் பழ கூடையை உண்டு இருக்கலாமே என்று. அதற்க்கு அவர்கள் ஒன்று சேர கூறியது Ubuntu: அனைவரும் துக்கத்தில் இருக்கும்போது எங்களில் ஒருவன் மட்டும் எப்படி மகிழ்வாய் இருக்க முடியும் என்று கூறினார்கள். ஆப்ரிக்காவின் Xhosa கலாச்சாரத்தில் Ubuntu என்பது நாம் எப்படியோஅப்படியே நான்.

இந்த செய்தி துண்டை படித்தவுடன் எனக்கு இன்னொரு சம்பவம் ஞாபகத்தில் வந்தது, இது ஒரு சில IT கம்பனிகளில் நடக்கும் ஒரு வித தேர்வு முறை அல்லது குழு வளர்ச்சி விளையாட்டு, அதில் பங்கேற்கும் அனைவருக்கும் ஒரு பல்லூன் கொடுக்கப்பட்டது, நிகழ்ச்சி நடத்துபவர் உங்களுக்கு மூன்று நிமிடம் அவகாசம் தருகிறோம், நீங்கள் யார் பல்லூனை வேண்டுமானாலும் வெடிக்கலாம், கடைசி வரை யார் பல்லூனை உடைக்காமல் வைத்திருக்கிறோஅவரே வெற்றி பெற்றவர் என்று அறிவிக்கிறார். அடுத்த விநாடியே அனைவரும் அடுத்தவர் பல்லூனை உடைக்க மேசை மீதும் நாற்காலி மீதும் தாவி கொண்டு இருந்தார்கள் . இதில் சில தியாகிகள் அவர்கள் பலூனை அவர்களே உடைத்து விட்டனர், வெற்றி பெற வேண்டி ஒரு சிலர் அடுத்தவர்களிடமிருந்து தப்பித்து ஓடி கொண்டு இருந்தனர். மூன்று நிமிடம் முடிந்தது அதில்
ஒரு சிலர் வெற்றி மகிழ்ச்சியில் இருந்த பொது நிகழ்ச்சி நடத்தியவர் அவர்களை பார்த்து, நீங்கள் யார் பலூனையும் விடிக்காமல் இருந்து இருந்தால் நீங்கள் அனைவருமே வெற்றி பெற்று இருக்கலாமே என்று கேட்டார்.

எப்பிடி இருந்த நம்ப இப்பிடி ஆயிட்டோம்!!!

ஆப்ரிக்காவின் Ubuntu போல் தமிழில் நாம் தொலைத்த படிப்பினைகளில் சில 
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை 
ஊர் கூடி தேர் இழுப்போம் 
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 
...

செவ்வாய், 1 மே, 2012

மே தினம்.

உழைக்கின்ற அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள். உழைக்கின்ற அனைவருக்கும் ன்னு சொன்னவுடனே யாரையோ சொல்றேன்னு நினைக்காதிங்க, இல்லை இந்த தொலைக்காட்சிகள்  எல்லாம் கொண்டாடுவதுபோல் சினிமா மற்றும் சின்னத்திரை தொழிலாளர்களுக்கான நாள் என்றும் தப்பா நினைக்காதிங்க 

நம்ப வீட்ல நமக்காக உழைக்கின்ற பெண்கள் முதல் எங்களை போல மூளைய கசக்கி பதிவு போடற உழைப்பாளிகள் வரை எல்லோரையும் தான் சொல்றேன்.

சரி நான் இப்போ மே தின வரலாறு எல்லாம் சொல்ல வரலை, அதை நீங்க இங்க போய் விவரமா படிச்சு தெரிஞ்சுக்கோங்க http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%.

மே தினத்தில் அதிக பட்சமான வேலை செய்துவிட்ட திருப்தியுடனும் , எப்பிடியோ ஒரு பதிவு போட்ட திருப்தியுடனும் இன்னிக்கு இதோட முடிச்சிக்குறேன்.