ஆள் நடமாட்டமே இல்லாத சென்னை ஸ்டேர்லிங் ரோடு, அதிசயமாக அன்று
தெருவிளக்குகள் மஞ்சள் தூவி கொண்டிருந்தன, தெரு முனையில் ஒரு வங்கியின்
விளம்பர பலகை தெரு மஞ்சள் நீக்கி பவுடர் போட்டது போல் வெள்ளை வெளிச்சம்
பூசி இருந்தது. உள்ளே பாதி தூக்கத்தில் பாதுகாவலர் வளம் முடித்து அறிக்கை
ஏட்டில் கையெழுத்திட்டு மணி பார்த்தார் மணி 3 ௦௦. அதே சென்னையில் அந்த
நேரத்திலயும் பரபரப்பாய் தாம்பரம் ரயில்வே நிலையம், அதன் அருகே ஒரு
குடியிருப்பில் , அருண் ரயில்வே துறை அதிகாரி என்ற பெயர் பலகையும், சங்கீதா
வங்கி மேலாளர் என்ற பலகையும் வீட்டின் வாசலை அலங்கரிக்க அமைதியாய் ஒரு
வீடு, உள்ளே நுழைந்ததும் விசாலமான, உயரமான சாலறை, சுவரில் அங்காங்கே அருண்
சங்கீதா தம்பதியர் புகைப்படம் தொங்கி கொண்டிருந்தது, இது தவிர அழகான
குழந்தைகள் படமும் நிரம்பி இருந்தது. அருண் கீழே ஒரு அறையில்
உறங்கிகொண்டிருந்தார். மாடியில் ஒரு பெரிய அறையில் தொலைக்காட்சி பெட்டி
அனைக்கபடாமல், ஜென்னல் பாதி துறந்திருக்க, பெரிய கட்டில் காலியாய் இருக்க
தலையனை துணையுடன் தரையில் சங்கீதா உறங்கிகொண்டிருந்தார் மணி 3 .30 .
சென்னையின் இன்னொரு மூலையில் தி நகரில் ஒரு மாடி வீட்டு மொட்டை மாடியில்
ஒரு சிமெண்ட் ஓடு போட்ட ஒரு சிறிய வாடகை வீடு, உள்ளே சத்தம் அதிகமாகவும்,
காற்று இதமாகவும் தந்து கொண்டிருந்த மின்விசிறி, ஒற்றை கட்டிலில் ஒருவன்
விடுதலை காற்றை சுவாசித்துகொண்டிருந்தான், எதிரே உள்ள மிக பெரிய விளம்பர
பலகையில் காட்டியது மணி 4 ௦௦. பேப்பர் போடுபவர்களும், பால்
போடுபவர்களும்,டியூஷன் செல்லும் மாணவர்களும் தெருவை மெதுவாய் ஆக்ரமிக்க
தொடங்கிக்கொண்டிருக்க நுங்கம்பாக்கத்தின் ஒரு தெருவில் லக்ஷ்மி இல்லம்
என்ற பெயர் தாங்கிய ஒரு அழகிய வீடு, புதிதாய் கட்ட பட்ட வீடு என்பது
பார்த்ததும் தெரிகிறது, உள்ளே நுழைந்ததும் ஒரு அழகிய பெண்ணின் போட்டோ நம்
பார்வையை கவரும், வாடாத மாலையும் அணையாத விளக்கும் அவள் இறந்து சில
நாட்கள்தான் ஆகியுள்ளது என்று தெரிகிறது, மாடியில் ஒரு பொம்மையை
கட்டிபிடித்தபடி உறங்கிகொண்டிருந்தாள் ஒரு சிறய அழகு தேவதை, இன்னொரு
அறையில் இரண்டு நாள் தாடியுடன், சோகம் முகத்தில் தெளிவாய் தெரிய உறக்கம்
வராமல் பிறண்டு கொண்டிருந்தான் அந்த அழகு தேவதையின் தந்தை, அவனுடைய
அறையுலும் அதே போட்டோ, கூடவே குடும்ப படங்களும் , குட்டியின் படங்களும்
நிரம்பி இருந்தன அதன் நடுவே ஒரு அழகிய கடிகாரம் மணி 4 30 . பறவைகளும்,
மாணவ சிட்டுகளும் சுறுப்பாக வேலை துடங்கிவிட்ட நிலையில், டி கடையில்
பேப்பர் , டி வியாபாரம் சூடு பிடிக்க, இட்லி கடை திறந்துகொண்டிருக்க,
கோடம்பாக்கத்தில் தற்போதைய மிகவும் புகழ் பெற்ற நடிகையின் வீடு அவர்தான்
இன்றைய சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் முக்கிய புள்ளியாக இருப்பவர்
அவருடைய கணவரும் ஒரு நடிகரே. நடிகையின் வீடு எப்படி இருக்கும் என்று
நீங்கள் எப்பிடி எல்லாம் நினைப்பீர்களோ அதைவிட அழகாய் ஒரு வீடு, உள்ளே
தம்பதியர் வாங்கிய அணைத்து பதக்கங்களும் தனியறையில் அணிவகுக்க, உலக
ஒருமைபாட்டுக்கு சின்னமாக, புதுவை ஆரோவிலில் அணைத்து நாட்டு மண் கொண்ட ஒரு
சின்னம் உண்டு, அது போல் அணைத்து நாட்டு நினைவுப்போருட்களும் வீட்டை
அழகுபடுத்த, அவர்களின் வெற்றி பாதையை பிரதிபலித்தது. மாடியில் தம்பதியர்
உறங்க அவர்கள் நேர் எதிரே விலை உயர்ந்த வெளிநாட்டு கெடிகாரம் மணி 5 00 .
சூரியன் உதித்துவிட்டான் கடலோரத்தில் நடை பழகுவோரும், எடை குறைப்போரும்,
மீன் பிடிப்போரும் என மெரினா விழித்துகொண்டிருந்தது , அண்ணா நகர் காவலர்கள்
குடியிருப்பு மைதானத்தில் காவலர்கள் தங்கள் காலை பயிற்சியை செய்து
கொண்டிருந்தனர், மைதானத்தை தள்ளி உயர் அதிகரர்களின் குடியருப்பு அதில்
முதல் வீடு , சூரியன் உள்ளே எட்டிபார்க்க தரையில் மாத்தலா போட்டு ஒரு
புதுமன தம்பதியர் அணைத்துக்கொண்டு படுத்திருக்க, சத்தியன் IPS என்ற பட்டம்
கர்வத்துடன் நிமிர்ந்துநிற்கும் சத்யனின் படத்தின் கீழ் இருக்க, குருவி
கத்துவதுபோல் காலை அலாரம் அடித்தது மணி 5 30 மனைவியை அணைத்தபடி அலாரத்தை
நிறுத்தினான் சத்யன் அதே நேரம், தம்பரதிலும்,டி நகரிலும் ,
நுங்கபக்கதிலும், கோடம்பாக்கத்திலும் அலாரம் அணைக்க பட்டது. இன்று நடக்க
போகும் நிகழ்வுகள் ஏதும் அறியாமல் அனைவரும் துழில் கலைந்தனர்.
seems like the start of a crime novel....but u have put 'TROP DE INFORMATION' to retain...u need to dilute a little bit...otherwise its very difficult to follow the information u want to convey.
பதிலளிநீக்குP.S : Still I believe ur best is in writing "Kavithai's"
Whatever i mentioned above is purely my opinion.
நன்றி நண்பரே, நீங்க என் மேல வச்சிருக்கிற நம்பிக்கையை பூர்த்தி செய்ய முயற்சி செய்கிறேன்.
நீக்கு