அமெரிக்கா - பிரான்ஸ் கூடை பந்து இறுதி ஆட்டம் நடந்துகொண்டிருக்க அமெரிக்கா தான் வெற்றி பெரும் என்று தின்னமாய் தெரிந்தாலும், மனதிற்குள் பிரான்ஸ் வெற்றி பெறாத என்ற ஒரு சின்ன ஆசையுடன் வெளியே வந்து வானத்தை பார்த்து கொண்டிருந்தேன். ஒளி மாசுபாட்டலும் , அங்கங்கே சிறு மேகங்களிடையே நட்சத்திரங்கள் சிறிதாய் மின்னுவதை பார்த்ததும் இன்று நட்சத்திர இரவென்றும், அதிகமான எரிநட்சத்திரங்கள் விழும் என்றும் இணையத்தில் படித்தது ஞாபகத்தில் வந்தது, நட்சத்திரங்களையும் , வினூர்தி அசைவுகளையும் பார்த்து கொண்டிருந்தேன், சட்டென்று சீறி பாய்ந்தது ஒரு எரி நட்சத்திரம். எரி நட்சத்திரம் வரும்போது நாம் மனதில் எது நினைத்தாலும் நடக்கும் என்று ஒரு நம்பிக்கை இருப்பதால், அது மறைவதற்குள் ஏதேனும் நல்லதாக நினைக்க எண்ணி தேடி பிடிப்பதற்குள் மறைந்தே போனது எரி நட்சத்திரம்.
இது என்ன முட்டாள் தனமான மூட நம்பிக்கை, நான் பிரான்ஸ் வெற்றி பெறவேண்டும் என்று நினைத்திருந்தால் பிரான்ஸ் வெற்றி பெற்றிருக்குமா? என்று என்னையே கேள்வி கேட்டுகொண்டிருந்தபோது எனக்குள் தோன்றிய பதில் இது தான்.
எந்த ஒரு விஷயத்தை நம் ஆழ் மனதில் அடிக்கடி சொல்கிறோமோ, அல்லது நாம் எதன் மீதி தீரா பற்று வைத்திருகிறோமோ அதுவே எரி நட்சத்திரம் வரும் முன்னும் , வரும்போதும் , சென்ற பின்னும் நம் மனதில் இருக்கும், அப்படி எல்லா நொடியும் நம் மனதில் இருக்கும் எந்த ஒரு இலக்கும் கண்டிப்பாக நிறைவேறும்.
நாம் மூட நம்பிக்கை என்று நினைக்கும் நம் முன்னோர்களின் எந்த ஒரு பழக்கமும் ஒரு ஆழ்ந்த கருத்தை உள்நிருத்தியே அமைந்துள்ளது என்று தோன்றியது.