சென்ற ஞாயிறு(எந்த ஞாயிறு ன்னு சரியா தெரியல ) பிரெஞ்சு தொலைக்காட்சியில் ஒரு பிரபல ராப் பாடகியின் பேட்டி ஒன்று ஒளிபரப்பானது, அதில் சிந்திக்க வேண்டிய இரண்டு விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
DIAMS என்கிற Melanie , இவர் 2003 முதல் பிரான்சு நாட்டின் ராப் ராணியாக வளம்வந்தவர்; இவருடைய பல பாடல்கள் காதல் பற்றியும், சமுதாய கோபம் பற்றியும் சில பாடல்கள் அரசியல்வாதிகள் பற்றி நேரடி விமர்சனமாக இருந்தது, இவருகேன்று ஒரு இளைஞர் கூட்டம் இருந்தது, குறிப்பாக பெண்கள். இவருடைய பாடல்கள் இளைய சமுதாயத்தை கெடுப்பதாய் சில பழமைவாதிகள் குறை கூறுவதுண்டு. பல இசை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று மிகவும் பரபரப்பான நட்சத்திரமாக இருந்தார். 2008 இறுதிகளில் இவர் திடீரென்று இசை உலகிலிருந்து காணமல் போனார். சரியாக ஒரு வருடம் கழித்து ஒரு பெரிய பத்திரிகை ஒன்றில் அவர் புகைப்படம் ஒன்று வெளியானது, அதில் அவர் முழு பர்தா அணிந்த ஒரு முஸ்லிமாக இருந்தார், இது அனைவருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது, ஏற்கனவே இவர் மீது குறை கூறிய பழமைவாதிகள், இவர் மத மாற்றத்திற்கு ஊக்குவிக்கிறார் என்றும், முஸ்லிம் மதத்தை பரப்புகிறார் என்றும், இவரை உதரணமாக கொண்ட இளைய சமுதாயதிற்கு தவறாக வழிகாட்டுகிறார் என்றெல்லாம் கொதித்தனர். Diams அந்த பத்திரிகை மீது வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றார்.
பிறகு ஒரு பெரிய இடைவெளி விட்டு, இப்பொழுது சுயசரிதை ஒன்றை வெளியிட்டார், அதை தொடர்ந்து தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார், அந்த பேட்டியை பற்றியது தான் இந்த பக்கம்.
பலவகையான கேள்விகள் இந்த பேட்டியில் கேட்கப்பட்டது, அதை இரண்டு கேள்விகளாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு மிக பெரிய பிரபிலமான நட்சத்திரமாக இருந்த நீங்கள், ஒரு ரசிகர் கூட்டத்தை உங்களுக்கென்று வைத்திருந்த நீங்கள், உங்களுக்கு ஒரு வீடு உங்கள் அன்னைக்கு ஒரு வீடு என்று இரண்டு வீடுகள் வாங்கி வசதியாய் இருந்த நீங்கள் ஏன் திடீரென்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு சென்றீர்கள்?
ஆம்
நீங்கள் சொல்வதுபோல் எல்லாமே இருந்தது பணம் பேர் புகழ் , ஆனால் எதோ ஒன்று இல்லாமலே இருந்தது. மிக அதிகமான நாட்கள் நான் தனியே என் படுக்கையறையில் இருப்பதாய் உணர்ந்தேன், பல முறை கண்ணீர் விட்டழுதேன், மனோ தத்துவ மருத்துவரை அணுகினேன், மருந்துகள் உண்டேன் இப்பொழுது சந்தோசமாய் இருக்கிறேன். என்னை அன்பு செய்த உள்ளங்களை என்னால் மறக்க முடியாது அனால் இந்த வாழ்க்கை எனக்கு தேவை பட்டது.
பிறப்பில் கிறிஸ்துவரான நீங்கள் இஸ்லாத்தை தழுவ காரணம் என்ன ?
எனது தாத்தாமார்களும் பாட்டிமார்களும் மிகவும் பக்தியுடன் தான் இருந்தார்கள், என்னை ஞாயிற்று கிழமைகளில் ஆலயத்திற்கு அழைத்து செல்வார்கள் , எனது பெற்றோர்கள் கடவுளை நம்பினாலும் சில சமயங்களில் மட்டுமே ஆலயத்திற்கு சென்றார்கள், நான் மனம் வருத்தத்தில் இருந்தபோது எனக்கு ஒரு நண்பர் மூலமாக குரான் திருநூல் கிடைத்தது, நானும் அதை இரண்டு முறைக்கு மேல் படித்தேன், மிகவும் ஆறுதல் அடைந்தேன். இஸ்லாமியர்கள் செய்யும் தவ முயர்ச்சியும், ஜெபங்களும் என்னை வெகுவாய் கவர்தன. யாரும் இப்பொழுது அதுபோல் கடவுளுக்கான அன்பை வெளிபடுத்துவது இல்லை. அதுவே எனக்கு பிடித்திருந்தது. அவ்வாறு வெளிபடுத்துதல் மிகவும் அவசியம் என்று எண்ணுகிறேன் இப்பொழுது நான் மிகவும் அமைதியாகவும் அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.
இந்த இரண்டு பதில்கள் என்னை மிகவும் பாதித்தது, இதில் சந்தோஷ பட வேண்டிய விஷயம் என்ன வென்றால் , வழக்கமாக pop பாடகர்கள் போதைக்கு அடிமையாவதை பார்த்திருக்கலாம், தவறான பாதைக்கு சென்று இறந்தும் பொய் இருக்கலாம், ஆனால் இவர் ஒரு அன்பின் பாதையை தேர்ந்தேடுதுள்ளார். இதில் நான் சிந்தித்த விஷயம் என்னவென்றால் நாம் இதுவரை நம்பிவந்த மதத்தை நம் பிள்ளைகளுக்கு சொல்லி தருகிறோமோ இல்லை ஏதும் சொல்லாமல் ஒரு வெற்றிடத்தை தருகிறோமா? அதுவே நாளை நம் பிள்ளைகள் பாதையாகி போகிறது. ஒரு வேற்றிடத்தில் ஒரு நல்ல எண்ணம் புகுந்தால் நல்லது, அதுவே ஒரு தப்பான(போதை, தீவிரவாதம்,... ) எண்ணமாக ஆகிவிட்டால் என்ன செய்வது. இப்படித்தான் எல்லா மத மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன என்பதும் மறுக்க முடியாது. எந்த மதமாகினும் அன்பின் வழி சொன்னால் எந்த ஒரு தடையும் இல்லை.
ஆரம்பத்தில் இரண்டு விஷயம் என்று சொன்னேன் அல்லவா, பணம், பேர், புகழ் மட்டும் இருந்தால் ஒருவன் சந்தோசமாக இருக்க முடியாது, என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்(இது எதுவேமே இல்லை என்றாலும் சந்தோசமாய் இருக்க முடியாது , சந்தோசம் என்பது நான் வரையறுக்கும் ஒரு விஷயமே, என்னுடைய பழைய பதிவில் இதே போல் ஒரு சிறை கைதியின் சந்தோசத்தை சொன்னேன் )
பி கு : இந்த பதிவு diams அவர்களை பற்றியோ அவர்களின் இசையின் தரத்தை பற்றியோ அவர்களின் மத தேர்வை பற்றியோ இல்லை .
இது அறிவுரை இல்லை எனது எண்ண ஓட்டங்களே

.jpg)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக