உணர்ச்சிகள் மூன்று வகைப்படும்
சுகம் தரும் உணர்ச்சிகள்
வலி தரும் உணர்ச்சிகள்
இரண்டும் ஒரு சேர தரும் உணர்ச்சி
சுகம் மூன்று வகைப்படும்
உன்னை நினைத்துக்கொண்டிருக்கையில்
உன்னோடு பேசிகொண்டிருக்கையில்
உன்னோடு இருக்கையில்
வலி மூன்று வகைப்படும்
உன்னை நினைத்துக்கொண்டிருக்கையில்
என்னோடு பேசாதிருக்கையில்
உன்னை பிரிகையில்
இரண்டும் சேர ஒரு உணர்ச்சி, ஒரே வகைப்படும்
காதல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக