நீங்கள் பார்க்கும் நிழல்கள்
நானில்லை, நிஜமில்லை
ஒளியின்றி நிழலில்லை
நிழலென்றும் ஒளியில்லை
பல கோணங்களிலிருந்து ஒளி
பல கோணங்களில் என் நிழல்
நீங்கள் பார்க்கும் நிழல்கள்
நானில்லை, நிஜமில்லை
கீழிருக்கும் ஒளி என்னை
நீட்டமாய் காட்டும்
மேலிருக்கும் ஒளியோ என்னை
குட்டையாய் காட்டும்
அருகிலிருக்கும் ஒளி என்னை
பெரிதாய் காட்டும்
தொலைவிலுள்ள ஒளியோ என்னை
புகையாய் காட்டும்
இரட்டையோளி என்னை
இரெண்டாய் காட்டும்
நான்கோளி என்னை
நான்காய் காட்டும்
அலைகின்ற தீப ஒளியோ
நான் அலைவதாய் காட்டும்
நிலையாய் நான் நிற்கிறேன்
அலையாய் உங்கள் பார்வையில்
என் நிழல் என் விருப்பமில்லை
நான் அதற்க்கு காரணமில்லை
நானாய் நானிருக்க
நிழலாய் என்னை பார்ப்பதேன்
ஒளியின்றி, நிழலுமின்றி
நிஜமாய் நானென்றும்
உங்கள் ஆருயிர் நண்பன்.

Puthu avatharama kalaku louis
பதிலளிநீக்கு