நமது தமிழ் சினிமாவின் நாடித்துடுப்பாய் இருந்த ஒரு விஷயம், ஒரு காட்சியின் அழுத்தம், திரைக்கதையில் திருப்பம், கதாபாத்திரத்தின் குணாதிசயம் எல்லாமே இதை சுற்றியே இருந்தது, அது தாலி.
மிகவும் துக்ககரமான காட்சி எதுவென்றால், கணவன் இறந்தபின் அலங்காரத்துடன் அழைத்துவந்து அமங்கலிஆகும் காட்சி அதிலும் கடைசியாக தாலியை கழற்றி பாலில் போடும் காட்சி.
மிக கொடூரமான ஒரு கதாபாத்திரம் என்றால், பெண் கழுத்திலிருந்து தாலியை பலவந்தமாக பறித்து எரியும் காட்சி, அது கணவனாக இருக்கலாம், மாமியாரை இருக்கலாம், பெண்ணின் தந்தையாக இருக்கலாம்.
கழுத்தில் ஒரு மஞ்சள் கயறு கட்டிக்கொண்டு, தங்க தாலியை கழற்றி கொடுப்பதும், அடகுவைப்பதும் என்று ஏழ்மையை காட்டி இருப்பார்கள்.
ஒரு பெண் புரட்சி புயலாக மாறுகிறாள், பொறுமை இழக்கிறாள், சுதந்திரம் பெறுகிறாள் என்பதை அந்த பெண்ணே, எல்லோரும் அதிர்ச்சிக்கொள்ள தன கையாலே தாலியை கழற்றி எறிகிறாள் என்று சித்தரித்து இருப்பார்கள், நமது திரைக்கதை ஆசிரியர்கள்.
தாலியை செய்வது என்பதே எவ்வளவு பயபக்தியுடன் செய்கிறார்கள், எப்படி செய்ய வேண்டும் என்பதையும் சில படங்களில் பார்த்திருப்போம்.
திரையில் மட்டுமல்ல, நிஜ வாழ்விலும். வரலக்ஷ்மி நோன்பு என்று கேள்வி பட்டிருப்போம், தாலி அணியும் முறைகளையும் பலவிதங்களில் பார்த்திருப்போம் அல்லது தாலியை தவறாக அணிந்திருந்தாலோ, அணியாமல் இருந்தாலோ அவர்களை குறைகூருவதையும் கேட்டிருப்போம். ஆனால் இப்பொழுது அது பத்திரமாக வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் பத்திரமாக. இப்போது திரைப்படங்களிலும் இதை மறந்துவிட்டனர், தொலைக்காட்சி தொடர்கள் கொஞ்சம் இதை கையில் எடுத்தாலும் அதே அளவுக்கு அதை மறக்கடிக்கவும் செய்கிறார்கள். தற்போது ஒரு சம்ப்ரதாயமாக இந்த திரு மாங்கல்யம் இருக்கிறது. இதுவும் மாறும்.
எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல், ஊர்வலங்கள் இல்லாமல், எதிர்ப்புக்கள் இல்லாமல் இந்த புரட்சி நிகழ்ந்திருக்கிறது . சத்தமில்லாத இந்த புரட்சிக்கு ஒரு பெரிய பங்கு மதிப்பிற்குரிய திருடர்களையும் சாரும்.
இதுப்போல் சத்தமில்லாத புரட்சிகளில் சில குங்குமப்பொட்டு, மெட்டி, கோலம், பூ ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக