முன்தினம்
நாளை காலை பயணம், அதற்கு தேவையான உடைகளை தேடி, வெறும் மூன்று நாட்களுக்கு, அலமாரியே அலசிப்போட்டு, பயணத்திற்கு, அங்கு பொய் இறங்கியவுடன் இரவு உணவுக்கு, அடுத்தநாள் வேலைக்கு, மீண்டும் இரவு உணவுக்கு , சுற்றிப்பார்க்க , திரும்பி வர என்று தனி தனியாக பிரித்தும் , எனக்கு நல்லதாய் நாலு dress இல்லை என்று புலம்பியும் வீட்டில் இருப்பவர்களுக்கு பெரும் எரிச்சலை உண்டு பண்ணிக்கொண்டிருந்தேன், பாவம். டாக்ஸி புக் பண்ணலாமா, இல்லை ட்ரைன்ல போகலாமா, இல்லை மனைவியை விட்டுவிட சொல்லலாமா என்று ஒரு குட்டி பட்டிமன்றம் நடத்தி, டாக்ஸி க்கு கொடுக்கிற காசு வைத்து அமெரிக்காவில் செலவு செய்யலாம் என்றும் , மனைவியையும் தொந்தரவு செய்யவேண்டாம் என்றும் அலசி ஆராய்ந்து கடைசியாக train லே போகலாம் என்று முடிவு செய்தேன். இருந்தாலும் அந்த நாளில் ரெண்டு மூன்று தடவையாவது டாக்ஸிக்கு போன் பண்ணனும் போன் பண்ணனும் சொல்லி இன்னும் எரிச்சலை கூட்டினேன். வழக்கமாக இந்தியா போகும் போதும் விடுமுறைக்கு சுற்றுலா செல்லும் போதும் கடைசியாக தூங்கி அவசரமாக கிளம்பும் நான், அன்று சீக்கிரமே பெட்டியை கட்டிவிட்டு, ஆறு மணிக்கு எழுப்பு என்று கூறிவிட்டு பத்து மணிக்கே தூங்க சென்றுவிட்டேன். இரவு முழுவதும் கண் மூடி இருந்தது அனால் மனதுக்குள் மட்டும் வெவ்வேறு நிகழ்வுகள் வேகமாக காட்சி மாறிக்கொண்டிருந்தன. அப்போது மணி ஆகிவிட்டது எழுந்திரி என்று உள் மனது சொல்ல, மூளை அதை நிராகரித்து இது மாயை இன்னும் அலாரம் ஒலிக்கவில்லை கண் திறக்காதே என்று ஆணையிட்டது, மீண்டும் காட்சிகள் மாறின மீண்டும் அதே குரல் மீண்டும் நிராகரிப்பு இவ்வாறாக பலமுறை நிராகரித்து கடைசியாக மூளையின் ஆணையை மீறி கண் திறந்து பக்கத்திலிருந்த அலைப்பேசியில் மணி பார்த்தேன் 2 : 30 , 3 : 41 , 4 : 20 , 4 : 41 , 5 : 10 , 5 : 21 கடைசியாக இந்த விளையாட்டுக்கு ஒரு முடிவுக்கட்டி எழுந்தே விட்டேன். ஆனாலும் நன்றாக தூங்கியதுபோல் உற்சாகமாக இருந்தேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக