அதன் கதை நம்மை தெரிந்தவர்களுக்கு தெரியும், அதன் கதை தெரிந்தவர்களே நமக்கு தெரிந்தவர்களாக முடியும். நம்மை முதல் முறை சந்திப்பவர்கள் கண்ணில் அது படும், சிலர் உடனே கேட்டுவிடுவர், சிலர் எப்போது கேட்கலாம் என்று காத்திருப்பர், மற்றும் சிலர் அருகிலிருப்பவரிடம் கேட்பர் அதை தெரிந்துகொள்ளாமல் யாராலும் இருக்க முடியாது. அதை கேட்டவுடன் மிக துல்லிமாக எந்த வயதில், எந்த இடத்தில், யார் யார் சுற்றி இருந்தார்கள், நேரம், எப்படி நிகழ்ந்தது என்று விளக்கமாக கூறுவோம். பின் அவர்களும் அவர்களின் தழும்புகளை பற்றி பேசுவார்கள் அதே துல்லியத்துடன். இதுவே நம் உறவுகளை பலப்படுத்தும் ஒரு சக்தியாக இருக்கும்.
விளையாட்டில், விபத்தில்,
சண்டையில், திருவிழாவில்,
என்று தழும்புகளின் கதைகள் ஆயிரம்;
அதில் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆயிரம்,
அதுவே நமது அடையாளங்கள் ஆகிடும்.
அதே போல் நம் மனதிலும் சில தழும்புகள் யாருக்கும் தேரியாமல்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக